×

வேதாரண்யம், கொள்ளிடத்தில் இடிமின்னலுடன் நள்ளிரவில் வெளுத்து வாங்கிய கனமழை

வேதாரண்யம், ஜூலை 19: வேதாரண்யம் பகுதியில் இடிமின்னலுடன் நள்ளிரளில் கனமழை வெளுத்து வாங்கியதால் மின்சாரம் தடைபட்டது.
வேதாரண்யம் பகுதியில் கஜா புயலுக்கு பிறகு மழை என்பதே அரிதாக உள்ளது. இதனால் நீர்மட்டம் குறைந்து கடும் வறட்சி நிலவுகிறது. வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகமாக நீடிப்பதால் கோடையைபோல் வெப்பம் மக்களை சுட்டெரித்து வருகிறது. இதனால் பகலில் மக்கள் வெளியில் வரவே அச்சப்படுகின்றனர்.இந்நிலையில் கடந்த சில தினங்களாக தமிழகத்தில் ஆங்காங்கே நல்ல மழை பெய்து வருகிறது. வானிலை ஆய்வு மையமும் 3 தினங்கள் தமிழகத்தில் குறிப்பிட்ட மாவட்டங்களில் மழை பெய்யும் என அறிவித்திருந்தது. ஆனால் நாகை மாட்டத்தில் மட்டும் மழையே பெய்யாமல் வரட்சி தொடர்ந்து நீடிக்கிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு வேதாரண்த்தில் இடி மின்னலுடன் கனமழை பெய்ந்தது. இந்த மழை வேதாரண்யம், கரும்பம்புலம், ஆயக்காரன்புலம் தகட்டூர் மற்றும் தென்னடார் வரை நிடித்தது.

வேதாரண்யத்தில் மழை அளவு 10.06 மி.மீ ஆகும். இந்த மழையால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனார். தற்போது வெப்பம் குறைந்து குளிர்ந்த காற்று வீசுவசால் பொதுமக்கள் சற்று நிம்மதியடைந்துள்ளனர். இந்த இடி மின்னலால் பல்வேறு இடங்களில் மின்சாதன பொருட்கள் பழுந்தடைந்தது. இந்நிலையில் நேற்று மாலை வானம் மேகமூட்டத்துடன் சாரல் மழை நீடித்தது.

கொள்ளிடம்:கொள்ளிடம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதியில் நேற்று மாலை திடீரென பலத்த காற்றுடன் இடியுடன் மழை பெய்தது. சுமார் 1 மணி நேரம் மிதமான மழை முதல் கனமழை வரை பெய்தது. மழை பெய்ததால் மழை நீர் கொள்ளிடம் கடைவீதியில் பெருக்கெடுத்து ஓடியது. இம்மழையினால் விவசாயிகள் வியாபரிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர். மழையினால் கொள்ளிடம் ஆற்றின் கரையோரம் உள்ள செங்கல் சூளைகளில் உள்ள சுடாத கற்கள் பெரிதும் பாதிக்கப்பட்டன. கொள்ளிடத்தில் நேற்று மாலை பெய்த மழையின் அளவு 37.6 மி.மீ ஆகும்.

Tags :
× RELATED பொறையாரில் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு தேர்தல் விழிப்புணர்வு முகாம்