திருவண்ணாமலை அருகே 8 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை: வாலிபருக்கு போலீஸ் வலை

திருவண்ணாமலை, ஜூலை 19: திருவண்ணாமலை அருகே 8 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வாலிபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். திருவண்ணாமலை அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் 8 வயது சிறுமி. அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 4ம் வகுப்பு படித்து வருகிறார். இவர் கடந்த 16ம் தேதி வீட்டின் அருகே விளையாடி கொண்டிருந்தார்.அப்போது, அங்கு வந்த வேட்டவலம் நடுத்திட்டு இருளர் பகுதியை சேர்ந்த ஐயப்பன்(20) என்பவர், சிறுமியிடம் `சாக்லெட் வாங்கித் தருகிறேன், என்னுடன் வா' என்று ஆசைவார்த்தை கூறி அழைத்து சென்றாராம். பின்னர், அங்குள்ள ஒரு ஓடையில் வைத்து பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து வெளியில் யாரிடமும் சொல்லக்கூடாது. மீறி சொன்னால் கொலை செய்து விடுவேன் என்று சிறுமியை ஐயப்பன் மிரட்டியதாக கூறப்படுகிறது.

இதையடுத்து வீட்டிற்கு சென்ற சிறுமி நடந்த சம்பவத்தை தனது பெற்றோரிடம் கூறி அழுதார். இதை கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் தாயார், சோர்வாக இருந்த சிறுமியை சிகிச்சைக்காக வேட்டவலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்தார்.மேலும், இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் நேற்று முன்தினம் திருவண்ணாமலை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தனர். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிந்து சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த ஐயப்பனை வலைவீசி தேடிவருகின்றனர்.

Tags :
× RELATED திருவண்ணாமலை மாவட்டத்தில் நிறுத்தி...