திருச்சி மன்னார்புரம் அருகே பலத்த காற்றில் அறுந்து விழுந்தது மின் கம்பி ஒரு மணி நேரம் மின்தடை

திருச்சி, ஜூலை 18: திருச்சி மன்னார்புரம் அருகே நேற்று வீசிய பலத்த காற்றினால் மின் கம்பி அறுந்து விழுந்தது. இதனால் அப்பகுதியில் மின்சாரம் தடைபட்டது.தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் பலத்த மழை, லேசான மற்றும் மிதமான மழை பெய்து வருகிறது. இதில் டெல்டா மாவட்டங்களில் திருச்சியை தவிர மற்ற மாவட்டங்களில் பலமான, மிதமான மற்றும் லேசான மழை பெய்து வருகிறது. இந்நிலையில் திருச்சி மாநகரில் திடீரென நேற்று இரவு மேகம் இருண்டு பலத்த காற்றுடன் லேசான மழை பெய்தது. தொடர்ந்து மத்திய பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் சாரல் மழை பெய்தது. இந்நிலையில் திருச்சி மன்னார்புரம் அருகே உள்ள பெட்ரோல் பங்க் எதிரே உள்ள மின்கம்பத்தில் பலத்த காற்றினால் மின்கம்பி அறுந்து விழுந்தது. இதனால் அப்பகுதியில் மின்சாரம் தடைபட்டது. இது குறித்த புகாரின் பேரில் மின்வாரிய அதிகாரிகள் மற்றும் மின் ஊழியர்கள் விரைந்து வந்து அறுந்து கிடந்த மின்கம்பியை சரி செய்து மீண்டும் ஒரு மணி நேரம் கழித்து மின் சப்ளை கொடுத்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.இதற்கிடையில் மின்கம்பி அறுந்து விழுந்த நிலையில் மின்சாரம் இருந்து அந்த கம்பியை யாரேனும் பிடித்திருந்தால் உயிர் சேதம் ஏற்பட்டிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து மாநகரில் பழுதான மின் கம்பிகளை சரி செய்யுமாறு மின்வாரியத்–்திற்கு பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertising
Advertising

Related Stories: