மொபட் மீது லாரி மோதி தொழிலாளி பரிதாப பலி

திருச்சி, ஜூலை 18: திருச்சி அரியமங்கலம் காட்டூர் காமராஜர் தெரு அபுசாலி மகன் அப்துல்தாவூத்(38), தொழிலாளி. இவர் நேற்று மதியம் வேலை விஷயமாக ரங்கம் வந்தார். தொடர்ந்து வீட்டுக்கு செல்வதற்காக மொபட்டில் வீடு நோக்கி சென்றார். திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலை ஓய் ரோடு பகுதியை கடக்கும்போது சென்னையில் இருந்து திருச்சிக்கு வந்த லாரி மொபட் மீது மோதியது. இதில் லாரியின் பின் சக்கரத்தில் சிக்கிய அப்துல்தாவூத் படுகாயமடைந்தார். உடனடியாக சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இது குறித்து வடக்கு போக்குவரத்து புலனாய்வு இன்ஸ்பெக்டர் மணிகண்டன், எஸ்ஐ கீதா வழக்குப்பதிந்து லாரி டிரைவர் லால்குடி கீழத்தெரு பிரான்சிஸ்சை(50) கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Advertising
Advertising

Related Stories: