கோகோ போட்டி

தா.பேட்டை, ஜூலை 18: முசிறி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் கோகோ கழகம் சார்பில் பள்ளி, கல்லூரி மாணவிகளுக்கான கோகோ போட்டி நடைபெற்றது. போட்டியை முசிறி கல்வி மாவட்ட அலுவலர் செல்வி தலைமையேற்று துவக்கி வைத்தார். பள்ளி தலைமையாசிரியை ஈஸ்வரி, விளையாட்டு ஆசிரியை ஆனந்தி உள்பட பலர் முன்னிலை வகித்தனர். இதில் 4 கல்லூரி, 14 பள்ளிகளை சேர்ந்த மாணவிகள் கோகோ விளையாட்டு போட்டியில் பங்கேற்றனர். வெற்றி பெற்ற அணிகளுக்கு மாவட்ட கோகோ கழக செயலாளர் கருப்பையா பரிசுகள் வழங்கினார்.

Advertising
Advertising

Related Stories: