கோயில்களில் ஆடி மாத சிறப்பு வழிபாடு

தா.பேட்டை, ஜூலை 18: முசிறி, தா.பேட்டை, தொட்டியம் பகுதிகளில் ஆடி மாதத்தை முன்னிட்டு அம்மன் கோயில் மற்றும் சிவாலயங்களில் சிறப்பு வழிபாடுகள் மற்றும் பூஜைகள் நடைபெற்றது. முசிறி சந்திரமவுலீஸ்வரர், மகாமாரியம்மன், சின்னசமயபுரத்தாள், காளியம்மன், அங்காளம்மன் உள்ளிட்ட கோயில்களிலும் தா.பேட்டை, காசிவிஸ்வநாதர், பெரிய மாரியம்மன், செங்குந்தர் மாரியம்மன், செல்லாண்டியம்மன், உடைப்பு வாய் கருப்பண்ணசுவாமி, தொட்டியம் மதுரகாளியம்மன், அனாலாடிஸ்வரர் உள்ளிட்ட கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. காலை முதலே பொதுமக்கள் காவிரியாற்றில் புனித நீராடி சுவாமியை வழிபட்டனர். முன்னதாக கோயில்களில் மூலவர் மற்றும் பிரகார தெய்வங்களுக்கு வாசனை திரவியங்கள் கொண்டு அபிஷேகங்களும், சந்தனகாப்பு மற்றும் மலர் அலங்காரமும் செய்யப்பட்டிருந்தது. திரளான பொதுமக்கள் சுவாமியை வழிபட்டு சென்றனர்.

Related Stories: