திருச்சி பாரதிதாசன் பல்கலை வளாகத்தில் சோலார் வாகன நிறுத்துமிடம் திறப்பு

திருச்சி, ஜூலை 18: திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக வளாகத்தில் 10 கிலோவாட் திறன் கொண்ட சூரிய சக்தியால் மின்சாரம் தயாரிக்கும் மேற்கூரை அமைப்புடன் கூடிய வாகன நிறுத்துமிடத்தை துணைவேந்தர் மணிசங்கர் திறந்து வைத்தார். இதன் மூலம் நாள் ஒன்றுக்கு குறைந்தபட்சம் 40 யூனிட் மின்சாரம் பெறப்பட்டு பல்கலைக்கழக நூலகத்திற்கு பயன்படுத்தப்பட உள்ளது. பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் செயல்பட்டு வரும் 600 கிலோவாட் சூரிய சக்தி ஆலை மற்றும் 50 சூரிய சக்தி தெரு விளக்குகள் அமைப்பினை தொடர்ந்து முன்னோட்டமாக ஒரு வாகன நிறுத்துமிடம் சூரிய சக்தி கூரையின் மூலம் நிறுவப்பட்டு வரும் காலங்களில் புதுப்பிக்க தகுந்த மின்சக்தி திட்டங்கள் தொடர்ந்து செயல்படுத்தப்படும் என துணைவேந்தர் மணிசங்கர் தெரிவித்தார். இதில் பல்கலைக்கழக பதிவாளர் கோபிநாத், தேர்வு நெறியாளர், பேராசிரியர்கள், மாணவர்கள் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டனர்.

Advertising
Advertising

Related Stories: