துறையூரில் லோக் அதாலத் 209 வழக்குகளுக்கு ரூ.1.08 கோடிக்கு தீர்வு

துறையூர், ஜூலை 18: துறையூர் சார்பு, மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றங்களில் நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்ற நிகழ்ச்சிக்கு சார்பு நீதிபதி சிவக்குமார் தலைமை வகித்தார். துறையூர் மாவட்ட உரிமையியல் நீதிபதி ஆறுமுகம், கிரிமினல் கோர்ட் நீதிபதி புவியரசு, வக்கீல் சங்கத் தலைவர் ராமசாமி, செயலாளர் தனசேகரன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். லோக் அதாலத், சார்பு நீநீமன்றத்தில் ரூ.52 லட்சத்து 24 ஆயிரத்து 141 மதிப்பிலான 20 வழக்குகளிலும், குற்றவியல் நீதிமன்றத்தில் ரூ.45 லட்சத்து 20 ஆயிரத்து 300 மதிப்பிலான 186 வழக்குகளிலும், மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தில் ரூ.85 ஆயிரத்து 584 மதிப்பிலான 3 வழக்குகளிலும் சமரசத்தீர்வு காணப்பட்டது. மொத்தம் நிலுவையிலிருந்த 209 வழக்குகளிலிருந்து 98 லட்சத்து 30 ஆயிரத்து 25 மதிப்பில் தீர்வளிக்கப்பட்டது. வங்கிகளில் வாராக்கடன்களாக ரூ.10 லட்சத்து ஆயிரத்து 500 கடன் பெற்ற 43 பேரிடமிருந்து வசூலிக்கப்பட்டது. தொடர்ந்து வழக்கு தரப்பினர்களுக்கு சமரசத் தீர்வு நகல் வழங்கப்பட்டது. துறையூர் வட்ட சட்டப்பணிகள் குழு வக்கீல்கள் ராஜூ, தனசேகரன், கலைச்செல்வன், செல்லதுரை, பால்ராஜ், கணேஷ்சங்கர் ஆகியோர் தேசிய மக்கள் நீதிமன்றத்தில் வழக்குகள் தீர்வு காண உதவி செய்தனர். மேலும் மனோகரன், முத்துக்குமார், செந்தில்குமார், கருணாகரன் உள்ளிட்ட துறையூர் வக்கீல்கள் பங்கேற்றனர். துறையூர் வட்ட சட்டப்பணிகள் குழு நிர்வாக உதவியாளர் கலைவாணன் ஏற்பாடு செய்தார்.

Related Stories: