கிராம வங்கி கிளைகளில் நிதிசார் கல்வி முகாம்

ஆத்தூர், ஜூலை 18:ஆத்தூர், பெத்தநாயக்கன்பாளையம் தாலுகாவில் உள்ள தமிழ்நாடு கிராம வங்கி கிளைகளில் நிதிசார் கல்வி முகாம் நடத்தப்பட்டது.  பெத்தநாயக்கன்பாளையம் கிளை சார்பில் வீரகவுண்டனூர் கிராமத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு கிளை மேலாளர் கோபிநாத் தலைமை வகித்தார். உதவி மேலாளர் அர்ச்சனா முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் டிகேஎஸ் நிர்வாக மேலாளர் சந்திரா, தலைமை அலுவலர் கதிரேசன், ஒய்வு பெற்ற கூட்டுறவு கடன் சங்க நிர்வாகி கோதண்மராமன் ஆகியோர் கலந்து கொண்டு வங்கியின் செயல்பாடு, கடன் திட்டங்கள், சேமிப்பு, காப்பீடு உள்ளிட்ட விபரங்களை பொதுமக்களுக்கு எடுத்துரைத்தனர். நிகழ்ச்சியில் பெத்தநாயக்கன்பாளையம் பகுதி பொதுமக்களும், வங்கி வாடிக்கையாளர்களும் கலந்து கொண்டனர். இதேபோல், கருமந்துறை வங்கி கிளை சார்பில், மேலாளர் சங்கர் தலைமையில் முகாம் நடந்தது. பேளூர் கிளை சார்பில் நடந்த முகாமில் சரண்ராஜ், ராஜீவன் உட்பட பலர் கலந்து கொண்டனர். வாழப்பாடி கிளையின் சார்பில் மேலாளர் கோபாலகண்ணன் தலைமையில் நடந்த முகாமில் ஏராளமான பொதுமக்களும், வாடிக்கையாளர்களும் கலந்து கொண்டனர்.

Advertising
Advertising

Related Stories: