கரபுரநாதர் கோயிலில் சிறப்பு பரிகார பூஜை

ஆட்டையாம்பட்டி, ஜூலை 18: சேலம் உத்தமசோழபுரம் கரபுரநாதர் கோயிலில் சந்திர கிரணகத்தையொட்டி, நேற்று முன்தினம் இரவு நடை அடைக்கப்பட்டது. நள்ளிரவு 1.30 மணி முதல் அதிகாலை 4.30 வரை நீடித்த கிரகணம் முடிந்தபின் நேற்று அதிகாலை 5 மணிக்கு கோயில் திறக்கப்பட்டது. பரிகார பூஜைக்காக கோயில் முழுவதும் தண்ணீர் ஊற்றி கழுவி சுத்தம் செய்தனர். தொடர்ந்து, மூலவர் கரபுரநாதர், பெரிய நாயகி அம்மன், கோயில் கொடிமரம் முதல் அனைத்து சாமிகளுக்கும் சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் செய்யப்பட்டது. அதை தொடர்ந்து, சந்திரகிரகண தோஷம் ஏற்பட்ட பூராடம், உத்திராடம், திருவோணம், கிருத்திகை மற்றும் உத்திரம் நட்சத்திரக்காரர்களுக்கு பரிகார பூஜைகள் செய்யப்பட்டது.  கிரகண தோஷம் நீங்க, சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கோயிலுக்கு வந்து கரபுரநாதர் மற்றும் நவகிரக தரிசனம் செய்தனர்.

Advertising
Advertising

Related Stories: