மகுடஞ்சாவடியில் திமுக இளைஞரணி கூட்டம்

இளம்பிள்ளை, ஜூலை 18:மகுடஞ்சாவடியில் மேற்கு மாவட்ட திமுக இளைஞரணி பொது உறுப்பினர்கள் கூட்டம், மாவட்ட செயலாளர் சிவலிங்கம் தலைமையில் நடந்தது. நிகழ்ச்சிக்கு, மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் மணிகண்டன் வரவேற்றார். திமுக நிர்வாகிகள் சுந்தரம், அன்பழகன், சம்பத், கமலக்கண்ணன், மகேந்திரன்ம் பாபு, அருள்குமார், பிரபுகண்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில், உதயநிதி ஸ்டாலினை மாநில இளைஞரணி செயலாளராக நியமனம் செய்ததற்கு வாழ்த்து தெரிவித்தல், வேலூர் எம்பி தேர்தலில் தீவிர பணியாற்றுவது, உறுப்பினர் சேர்க்கை குறித்து விவாதிக்கப்பட்டது.

Advertising
Advertising

Related Stories: