×

விநாயகா மிஷன் அலைடு ஹெல்த் சயின்ஸ் சார்பில் இலவச கண் பரிசோதனை துவக்க விழா

சேலம், ஜூலை 18: இந்தியா விஷன் நிறுவனம் கண் பார்வை பராமரிப்பில் சிறந்து விளங்கும் லாப நோக்கமற்ற பதிவு செய்யப்பட்ட ஓர் அறக்கட்டளை. இந்தியாவில் உள்ள பின்தங்கிய சமூகங்களை சேர்ந்தவர்களுக்கும், குழந்தைகளுக்கும் தடுக்கக்கூடிய பார்வை குறைப்பாட்டினை சரியான நேரத்தில் தடுப்பதற்கான கண் பரிசோதனையை இலவசமாக செய்து அதற்கான தீர்வை வழங்குகிறது. இதை அடிப்படையாக கொண்டு விநாயகா மிஷன் அலைடு ஹெல்த் சயின்ஸ் துறையும், இந்தியா விஷன் நிறுவனமும் புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தின் கீழ் முதற்கட்ட கண் பரிசோதனை திட்டம் வீரபாண்டி ஒன்றியத்திற்குட்பட்ட பாலம்பட்டி அரசு நடுநிலைப் பள்ளியில் ஆரம்பிக்கப்பட்டது.
துறையின் டீன் டாக்டர் செந்தில்குமார் இத்திட்டத்தை தொடங்கி வைத்தார். அவர் பேசுகையில், ‘சேலம் மாவட்டம் முழுவதிலும் பல்வேறு பள்ளிகள் இத்திட்டத்தின் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. பள்ளி குழந்தைகளுக்கு இலவசமாக கண் பரிசோதனை மற்றும் கண் கண்ணாடிகள் வழங்கப்படும்,’ என்றார். நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை துறையின் கண் ஒளியியல் பிரிவு பேராசிரியை தமிழ்சுடர் மற்றும் இந்தியா விஷன் நிறுவனத்தின் சேலம் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் செந்தில் ஆகியோர் செய்திருந்தனர்.



Tags :
× RELATED தேர்தல் விதிகள் குறித்து அனைத்து கட்சி கூட்டம்