பாம்பாண்டி முனியப்பன் கோயில் விழா

இளம்பிள்ளை, ஜூலை 18: இளம்பிள்ளை அருகே, பாம்பாண்டி முனியப்பன் கோயில் விழா நடந்தது. இளம்பிள்ளை அருகே கல்பாரப்பட்டி, மனியனூர் பகுதியில் அமைந்துள்ள பாம்பாண்டி  முனியப்பன் கோயிலில் ஆடி திருவிழா கொண்டாடப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கிடா மற்றும் கோழி வெட்டி நேர்த்தி கடனை செலுத்தினர். இக்கோயில் சிறப்பு பற்றி பூசாரி சுப்பிரமணி கூறுகையில், ‘யாரையாவது விஷப்பூச்சிகள் தீண்டினால், இக்கோயிலுக்கு வந்து பாடம் போட்டுவிட்டு சுவாமிக்கு வேண்டுதல் வைத்து சென்றால், அவர்களுக்கு விஷம் உடலில் ஏறாமல் முற்றிலும் தடுக்கப்பட்டு, உயிர் பிழைத்து வருகின்றனர். இதனால் இக்கோயிலுக்கு பல்வேறு பகுதியில் இருந்து திராளனோர் வந்து செல்கின்றனர்,’ என்றார். இந்நிலையில், ேநற்று ஆடி முதல் நாளில் பக்தர்கள் வேண்டுதலை நிறைவேற்றும் வகையில் கிடா மற்றும் கோழி பலியிட்டு சிறப்பு பூஜை செய்தனர்.

Related Stories: