ஓமலூர், தாரமங்கலம் வட்டாரத்தில் சுகாதாரமற்ற குடிநீர் விற்பனை அதிகரிப்பு

ஓமலூர், ஜூலை 18: ஓமலூர், தாரமங்கலம் வட்டாரத்தில் குடிநீர் பற்றாக்குறை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நகர்புறத்தில் விற்பனை செய்யப்படும் கேன் குடிநீர், தற்போது கிராமங்களிலும் 20 லிட்டர் ₹40 முதல் ₹60 வரை விற்பனை செய்கின்றனர். மக்களின் தேவையை பயன்படுத்தி, முறையான அனுமதி பெறாமலும் தரமற்ற முறையில் குடிநீரை கேன்களில் அடைத்து விற்பனை செய்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஓமலூர் வட்டாரத்தில் குடிசை தொழிலாக மாறி வரும் தண்ணீர் விற்பனை, தெருவுக்கு தெரு விற்பனை செய்கின்றனர். விற்பனை செய்யப்படும் குடிநீர் பாட்டில்கள், கேன்களில் தயாரிக்கும் நிறுவன பெயர் விபரங்கள் இல்லை. இதுபோன்ற கேன், பாட்டில்களில் உள்ள நீரை குடித்தால் பல வகையான உடல் உபாதைகள் வருவதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். மாவட்டத்தில் பல இடங்களில் புற்றீசல் போல் மினரல் வாட்டர் தயாரிக்கும் நிறுவனங்கள் தோன்றியுள்ள நிலையில், அவை முறையான அனுமதி பெற்றுள்ளதா என உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் ஆய்வு நடத்த வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. விற்பனையாளர் ஒருவர் கூறுகையில், குடிநீர் பாட்டில்கள் தயாரிக்கும் நிறுவனங்களில் தயாரிக்கப்பட்ட குடிநீர் தரத்தை பொதுமக்கள் https:/safewaterfssai.gov.in//cleanwater/homeஎன்ற இணையதளத்தில் மூலம் தெரிந்து கொள்ளலாம். விற்பனை செய்யப்பட்டும் பாட்டில்கள் கேன்களில் ஐஎஸ்ஐ எண் உணவு பாதுகாப்பு உரிம எண் தயாரிக்கப்பட்ட குடிநீர் பரிசோதனை அறிக்கை, எந்த நாள் வரை பயன்படுத்த, நாள் விபரங்கள் இவற்றை அறிந்து கொள்ளலாம். போலியானவை என்றால் உடனடியாக மாவட்ட நிர்வாகம் அல்லது உணவு பாதுகாப்பு துறைக்கு புகார் அளிக்கலாம்,’ என்றார்.

Advertising
Advertising

Related Stories: