ஆடி மாத பிறப்பை முன்னிட்டு நாமக்கல்லில் தேங்காய் சுடும் பண்டிகை

நாமக்கல், ஜூலை 18: ஆடி மாதம் பிறப்பை கொண்டாடும் வகையில் நாமக்கல் மாவட்டத்தின் பல பகுதியில் சிறுவர், சிறுமிகள் தேங்காய்களை சுட்டு மகிழ்ந்தனர்.நாமக்கல் மாவட்டத்தில் ஆடி மாதம் முதல் நாளான நேற்று சிறுவர், சிறுமிகள், புதுமண தம்பதியினரும் தேங்காய் சுட்டு, பண்டிகையை உற்சாகமாக கொண்டாடினர். தேங்காயில் துளையிட்டு அவல், பொட்டுக்கடலை, வெல்லம், எள், அரிசி, பாசிப்பருப்பு போன்ற  பொருட்களை நிரப்பி, அழிஞ்சி குச்சியை சொருகி தீயில் வாட்டி தேங்காயை சுட்டனர். பின்னர், தேங்காய்களை அந்தந்த பகுதியில் உள்ள பிள்ளையார் கோயில்களில் வைத்து வழிபாடு செய்தனர். நாமக்கல் நகரில் நேற்று தேங்காய் சுடும் பண்டிகை ஆங்காங்கே தெருக்களில் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. ஆடிமாத பிறப்பை முன்னிட்டு நேற்று மாரியம்மன் கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

Tags :
× RELATED மாவட்டம் முழுவதும் 3106 பதவிகளுக்கு...