மதுவிலக்கு பிரிவு வாகனங்கள் ஏலம்

நாமக்கல், ஜூலை 18: மதுவிலக்கு போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள், நாமக்கல் மதுவிலக்கு பிரிவு அலுவலகத்தில் வரும் 23ம் தேதி பொது ஏலம் விடப்படுகிறது. இதுகுறித்து நாமக்கல் மாவட்ட எஸ்பி அருளரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: நாமக்கல் மாவட்டத்தில் மதுவிலக்கு வழக்குகளில் கைப்பற்றப்பட்ட இருசக்கர வாகனங்கள், நாமக்கல் மதுவிலக்கு பிரிவில், வரும் 23ம் தேதி காலை 10 மணிக்கு ஏலம் விடப்பட உள்ளன. இந்த வாகனங்களுக்கு ஏலத்தொகைக்கான ரசீது மட்டும் வழங்கப்படும். ஏலம் விடப்பட இருக்கும் வாகனங்களை, வரும் 22ம் தேதி மாலை 5 மணி முதல் மதுவிலக்கு பிரிவு அலுவலகத்தில் பொதுமக்கள் பார்வையிடலாம். வாகனங்களை ஏலம் எடுப்பவர்கள், 23ம் தேதி காலை 8 முதல் 9 மணிக்குள் ஏலம் விடப்படும் இடத்தில் முன்பணம் செலுத்த வேண்டும். முன்பணம் செலுத்துபவர்கள் மட்டுமே, ஏலத்தில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவார்கள். மேலும், விபரங்களுக்கு மதுவிலக்கு பிரிவு அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு எஸ்பி அருளரசு தெரிவித்துள்ளார்.

Tags :
× RELATED மாவட்டம் முழுவதும் 3106 பதவிகளுக்கு...