மாற்றுப்பணியால் பள்ளிகள் பாதுகாப்பு கேள்விக்குறி

அரசு பள்ளிகளில் பணியாற்றி வரும் இளநிலை உதவியாளர்கள்,  இரவு காவலர்கள், துப்புரவு பணியாளர்கள் மாற்றுப்பணி என்ற அடிப்படையில், கல்வித்துறை அலுவலகங்களுக்கு நியமிக்கப்படுகின்றனர். ஆனால், நிரந்தர பணியிடம் கேட்டு, இம்மாவட்டத்துக்கு வரும் அதிகாரிகள், பள்ளி கல்வித்துறை உயர் அதிகாரிகளை வலியுறுத்தாமல் விட்டு விடுவார்கள். இதனால் பள்ளிகளில் வாட்ச்மேன் இல்லாமலும்,  இளநிலை உதவியாளர்கள் இல்லாமலும், தலைமை ஆசிரியர்கள் சிரமப்படுவார்கள். தற்போதும், மாவட்ட கல்வி அலுவலகம், மாவட்ட முதன்மை கல்வி அலவலகத்தில் இரவு காவலர் பணிக்கு, அரசு பள்ளிகளில் பணியாற்றி வரும் ஊழியர்கள், மாற்றுப்பணி என்ற அடிப்படையில் நியமிக்கப்பட்டுள்ளனர். இதனால் அரசு பள்ளிகளின் பாதுகாப்பு கேள்வி குறியாகி வருகிறது.

Tags :
× RELATED சாலை பணிகளால் ராசிபுரம் நகர் பகுதியில் போக்குவரத்து நெரிசல்