×

சூளகிரியில் 2ம் கட்ட பணிக்காக சாலையோர ஆக்கிரமிப்பு அதிரடியாக அகற்றம்

சூளகிரி, ஜூலை 18:  சூளகிரியில், 2ம் கட்ட சாலை பணிக்காக சாலையோர ஆக்கிரமிப்புகள் அதிரடியாக அகற்றப்பட்டது. வளர்ந்து வரும் நகரமான சூளகிரியில் அமைந்துள்ள சூளகிரி-கிருஷ்ணகிரி சாலையில், எந்நேரமும் வாகன போக்குவரத்து அதிகளவில் உள்ளது. மேலும், சாலையோரத்தை ஆக்கிரமித்து கடைகள் வைக்கப்பட்டுள்ளதால், போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டு வந்தது. இதையடுத்து, சாலை விரிவாக்க பணிகள் மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது. சாலை விரிவாக்கம் செய்யும்போது, சாலையோரத்தில் உள்ள ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். ஆனால், ஆக்கிரமிப்புகளை அகற்றாமல் உள்ளதை அதிகாரிகள் கண்டு கொள்ளவில்லை என புகார் எழுந்தது. இந்நிலையில், கடந்த மே மாதம், சூளகிரியில் உள்ள பள்ளி வகுப்பறையில் பற்றிய  திடீர் தீயால், பள்ளி அலுவலக அறை எரிந்தது. இதையடுத்து, பள்ளி முன்புள்ள பெட்டி கடைகளை அகற்ற மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உத்தரவிட்டார். இதை தொடர்ந்து நேற்று காலை முதல், 2ம் கட்ட சாலை அமைக்கும் பணி தொடங்கியது. அப்போது, சாலையின் இருபுறமும் இருந்த ஆக்கரமிப்பு கடைகளை, பொக்லைன் மூலம் வட்டார வளர்ச்சி அதிகாரிகள் அகற்றினர். இது பற்றி பொதுமக்கள் கூறுகையில், ‘சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது மகிழ்ச்சியளிக்கிறது. இதனால் போக்குவரத்து நெரில் குறையும். அகற்றப்பட்ட கடைகள் மீண்டும் அங்கு அமைத்தால், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்,’ என்றனர்

Tags :
× RELATED சீதாராமர் திருக்கல்யாணம்