அரசு பணியாளர்கள் நூதன போராட்டம்

கிருஷ்ணகிரி, ஜூலை 18: கிருஷ்ணகிரியில் தமிழ்நாடு அரசு பணியாளர்கள் சங்கம் சார்பில், கோரிக்கைகளை வலியுறுத்தி சிவப்பு சட்டை, வெள்ளைத் தொப்பி அணிந்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கிருஷ்ணகிரி புதிய பஸ் நிலையம் அருகே, அண்ணா சிலை எதிரில், தமிழ்நாடு அரசு பணியாளர்கள் சங்கத்தின் மாவட்ட மையம் சார்பில், கோரிக்கைகளை வலியுறுத்தி சிவப்பு சட்டை, வெள்ளைத் தொப்பி அணிந்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்திற்கு மாவட்ட தலைவர் உமாசங்கர் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் சிவக்குமார் முன்னிலை வகித்தார். மாநில துணை தலைவர் சோமேஸ்வரன் வரவேற்றார். மாநில துணைத் தலைவர் தலைவர் கிருஷ்ணன் சிறப்புரையாற்றினார். ரேஷன் கடை பணியாளர் சங்க செயலாளர் நாகேஷ், மாவட்ட பொருளாளர் பாலசுந்தரம், சாலை பணியாளர் சங்க மாநில பொதுச் செயலாளர் மாது, அங்கன்வாடி பணியாளர் சங்க வள்ளிம்மாள் ஆகியோர் வாழ்த்தி பேசினர். அங்கன்வாடி பணியாளர் சங்க வடிவுக்கரசி நன்றி கூறினார். போராட்டத்தின் போது, 21 மாத ஊதிய குழு நிலுவைத் தொகையை வழங்க வேண்டும். பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும்.
மத்திய அரசிற்கு இணையான போனஸ் ₹7 ஆயிரம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

Tags :
× RELATED உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு பயிற்சி...