மின்கம்பம் நட குழி தோண்டிய போது குழாய் உடைந்து வீணான தண்ணீர்

சூளகிரி, ஜூலை 18: சூளகிரி தாலுகாவில் மின்கம்பம் நடுவதற்கு குழி தோண்டிய போது, குடிநீர் குழாய் உடைந்து லட்சக்கணக்கான லிட்டர் தண்ணீர் வெளியேறி வீணானது. சூளகிரி தாலுகா, உத்தனப்பள்ளி அருகே ஆஞ்சநேயர் கோயில் பகுதியில், கடந்த ஒரு மாதத்திற்கு முன் குடிநீர் குழாயில் ஏற்பட்ட உடைப்பால், லட்சக்கணக்கான லிட்டர் தண்ணீர் வெளியேறி, சாலையில் வழிந்ேதாடி வீணாகி வருகிறது. இதனை சரிசெய்ய கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கிருஷ்ணகிரி பஸ் ஸ்டாண்ட் முன்பு, மின்கம்பம் நடும் பணி கடந்த சில நாட்களாக நடந்து வருகிறது. ஒயர் அமைக்கும் பணி முடிவடைந்த நிலையில், மின்கம்பம் நடுவதற்காக பணியாளர்கள் பொக்லைன் மூலம் நேற்று குழி தோண்டினர். அப்போது, அங்குள்ள குடிநீர் குழாய் உடைந்து, லட்சக்கணக்கான லிட்டர் தண்ணீர் வெளியேறி, சாலையில் வீணாக வழிந்தோயது. இதுகுறித்த தகவலின் பேரில், ஊராட்சி பணியாளர்கள் விரைந்து வந்து, குழாய் உடைப்பை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர்.

Tags :
× RELATED மாவட்டம் முழுவதும் 10 ஒன்றியங்களில் 3,586 பதவிகளுக்கு தேர்தல்