×

ஓசூர் மாநகராட்சி சார்பில் மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு பேரணி

ஓசூர், ஜூலை 18: ஓசூர் மாநகராட்சி சார்பில், மழை நீர் சேகரிப்பு விழிப்புணர்வு பேரணி நடந்தது. இதில் மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர். ஓசூர் மாநகராட்சி சார்பில் நடந்த மத்திய அரசு திட்டத்தின் கீழ், ஜல்சக்தி அபியான் (நீர் மேலாண்மை) மழை நீர் சேகரிப்பு குறித்த விழிப்புணர்வு பேரணி நேற்று நடந்தது. பேரணியை ஓசூர் கோட்டாட்சியர் குமரேசன்,  ஆணையாளர் பாலசுப்பிரமணியன் ஆகியோர் கொடியசைத்து துவக்கி வைத்தனர். இப்பேரணி காமராஜர் காலனியில் உள்ள ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் தொடங்கி, நகரின் முக்கிய சாலைகள் வழியாக சென்றது. பேரணியில் தண்ணீரைக் காப்போம், தலைமுறையை காப்போம், மழைநீர் உயிர்நீர் போன்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி முழக்கமிட்டவாறு, மழை நீரின் அவசியம் குறித்து மாணவ, மாணவிகள் விழிப்புணர்வை ஏற்படுத்தினர். நிகழ்ச்சியில் தாசில்தார் முத்துப்பாண்டி மற்றும் அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.போச்சம்பள்ளி: போச்சம்பள்ளி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடந்த மழை நீர் சேகரிப்பு பேரணிக்கு, தலைமை ஆசிரியர் சரஸ்வதி தலைமை தாங்கினார். பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் பழனி, செயலாளர் மூர்த்தி பொருளாளர் நாகராஜ், ஆகியோர் முன்னிலை வகித்தனர். துணை தலைமை ஆசிரியர்கள் ஆனந்திமாலா, சண்முகம், ஆசிரியர்கள் வண்ணியரசு, ராஜேஸ்வரி, சுகன்யா, ராதிகா, ஜோதி மற்றும் பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள் ராஜகோபால், குமார், கைலாசம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags :
× RELATED விழிப்புணர்வு பிரசாரம்