கெலமங்கலத்தில் தலைமை ஆசிரியர்களுக்கு மழை நீர் சேகரிப்பு பயிற்சி

தேன்கனிக்கோட்டை, ஜூலை 18: கெலமங்கலம் வட்டார கல்வி அலுவலகத்தில், தலைமை ஆசிரியர்களுக்கு மழை நீர் சேகரிப்பு பயிற்சி முகாம் நடைபெற்றது.  கெலமங்கலம் வட்டார கல்வி அலுவலகத்தில், தலைமை ஆசிரியர்களுக்கு ஜல்சக்தி பயிற்சி முகாம் நேற்று நடைபெற்றது. முகாமில் வட்டார கல்வி அலுவலர்கள் நாகராஜ், வெங்கடகுமார், அன்னைய்யா, வட்டார வளமைய ஒருங்கிணைப்பாளர் கீதா ஆகியோர் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் மழை நீர் சேகரிப்பு குறித்து தலைமை ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. இதில் கெலமங்கலம் வட்டாரத்தில் உள்ள பள்ளி தலைமை ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

Tags :
× RELATED கே.பூசாரிப்பட்டி அரசு...