வெறிநாய் கடித்ததில் 6 பேர் படுகாயம்

கிருஷ்ணகிரி, ஜூலை 18: பர்கூர் நகரில் பஸ் நிலையம், ஜெகதேவி சாலை, காரகுப்பம் ரோடு, மெயின் ரோடு உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான இறைச்சி கடைகள், மாலை நேர தள்ளுவண்டி கடைகள் உள்ளன. இந்த கடைகளில் மீதமாகும் இறைச்சிக்கழிவுகளை சாப்பிடுவதற்காக அப்பகுதியில் ஏராளமான தெருநாய்கள் சுற்றித்திரிகின்றன. இந்நிலையில், நேற்று காலை அங்கு சுற்றித்திரிந்த வெறிநாய் ஒன்று, சாலையில் செல்வோரையும், சாலையோரம் நின்றிருப்போரையும் துரத்தி, துரத்தி கடித்துள்ளது. இதில், கொல்லப்பள்ளி கிராமத்தை சேர்ந்த யுவராஜ் மகன் ஹரி(8), பர்கூர் சின்னையன்(56), ஏமக்கல்நத்தம் அஜீத்(23), அங்கிநாயனப்பள்ளி வெங்கடேசன்(28), பிஆர்ஜி மாதேப்பள்ளி தமிழன்(18), வேலூர் மாவட்டம் மல்லப்பள்ளி பாஸ்கர்(42) ஆகிய 6 பேர் படுகாயமடைந்தனர். இவர்கள் உடனடியாக பர்கூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். நகரில் பொதுமக்களுக்கு அச்சுறுத்தலாக சுற்றித்திரியும் நாய்களை பிடித்து அப்புறப்படுத்த பேரூராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags :
× RELATED சாலை பாதுகாப்பு வார விழாவையொட்டி இருசக்கர வாகன விழிப்புணர்வு பேரணி