×

தர்மபுரி எஸ்வி ரோட்டில் ₹1.90 கோடி மதிப்பில் விரிவாக்க பணி மும்முரம்

தர்மபுரி, ஜூலை 18: தர்மபுரி எஸ்வி சாலை விரிவாக்க பணிகள், ₹1.90 கோடி மதிப்பீட்டில் நடந்து வருகிறது. தர்மபுரி கடைவீதியின் தொடர்ச்சியாக அமைந்துள்ள எஸ்வி ரோட்டையொட்டி, சார்பதிவாளர் அலுவலகம், ஊராட்சி ஒன்றிய அலுவலகம், உதவி கலெக்டர் அலுவலகம், தாலுகா அலுவலகம், கிளைச்சிறை உள்ளிட்ட பல்வேறு அரசு அலுவலகங்கள் உள்ளன. இந்த சாலையில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்துவதற்காக, ₹1.90 கோடி மதிப்பில் விரிவாக்க பணிகள் மேற்கொள்ள நெடுஞ்சாலைத்துறை முடிவு செய்தது. அதன்படி ஆக்கிரமிப்புகளை அகற்றி விட்டு, சாலை விரிவாக்க பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. எஸ்வி ரோடு காந்தி சிலை அருகில் இருந்து அன்னசாகரம் பிரிவு சாலை வழியாக, சேலம் சாலையுடன் இணையும் வழித்தடத்தில், தெற்கே சுமார் 1 ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு சாலை விரிவாக்க பணிகள் நடக்கிறது. 7 மீட்டர் அகலம் கொண்ட இந்த சாலை, 14 மீட்டர் அகலத்திற்கு விரிவாக்கம் செய்யப்படுகிறது. இதில் அன்னசாகரம் பிரிவு சாலை இணையும் இடத்தில், ஒரு தரைபாலமும், சாலையின் கிழக்கு பகுதியில் கழிவுநீர் செல்ல கால்வாயும் அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதுபோல், காந்தி சிலையில் இருந்து கடைவீதி, தேர்முட்டி, சத்திரம், பெரியார் சிலை வரை ஆக்கிரமிப்புகள் அகற்றி சாலை விரிவாக்க பணிகள் மேற்கொள்ள வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags :
× RELATED திரவுபதியம்மன் கோயில் கும்பாபிஷேக பெருவிழா