திருப்பூர் பிச்சம்பாளையம் புதூரில் பள்ளி அருகே சுற்றித்திரியும் தெருநாய்கள்

திருப்பூர், ஜூலை 18:பிச்சம்பாளையம் புதூர் மாநகராட்சி பள்ளி அருகே தெருநாய்களில் தொல்லை அதிகரித்துள்ளது. இதனால் மாணவர்கள் அச்சத்துடன் பள்ளிக்கு சென்று வருகின்றனர். திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பிச்சம்பாளையம் புதூர் பகுதியில், ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகளில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். 50க்கும் மேற்பட்ட இறைச்சி கடைகள், மீன் கடைகள், 10க்கும் மேற்பட்ட ஓட்டல்கள் உள்ளன. இப்பகுதியில், வாரம் தோறும், ஞாயிறு, வியாழக்கிழமைகளில், அதிகளவில் இறைச்சி விற்பனை நடக்கும். மற்ற நாட்களில், சொற்ப அளவிலேயே அதன் விற்பனை நடந்து வருகிறது. இந்த இறைச்சிக்கடைகளில், வீணாக தூக்கி வீசப்படும் கழிவுகளை சாப்பிடுவதற்காக, ஏராளமான தெருநாய்கள் சுற்றித்திரிகிறது.

அப்போது, தெருநாய்கள் ஒன்றுக்கொன்று சண்டையிட்டுக் கொள்கிறது. அப்போது, சாலையில் நடந்து செல்வோர், வாகன ஓட்டிகள் என பலரும் தவறி கீழே விழுந்து படுகாயம் அடையும் சம்பவம் அடிக்கடி அரங்கேறி வருகிறது. நாளுக்கு நாள் தெரு நாய்களின் எண்ணிக்கை அதிகரிப்பதுடன், அவற்றின் அட்டகாசமும் அதிகரித்து வருகிறது. தெருநாய்களை பிடித்து அப்புறப்படுத்த வேண்டும் என, மாநகராட்சி நிர்வாகத்தினருக்கு, பொதுமக்கள் சார்பில், பலமுறை கோரிக்கை விடுக்கப்பட்டது. ஆனால், எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதனால், பொதுமக்கள் பீதியுடன் நடமாட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.  இந்நிலையில், கடந்த சில நாட்களாக பிச்சம்பாளையம் புதூர் நடுநிலைப்பள்ளி அருகே ஏராளமான தெருநாய்கள் சுற்றி திரிகின்றன. இதனால் மாணவர்கள் அச்சத்துடன் பள்ளிக்கு சென்று வர வேண்டிய நிலை ஏற்பட்டது. ஆகவே, மாநகராட்சி அதிகாரிகள் தெரு நாய்களை கட்டுப்படுத்த உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

Related Stories: