போலீசார் குடியிருப்பு பணிகளை விரைந்து முடிக்க வலியுறுத்தல்

திருப்பூர், ஜூலை 18: திருப்பூர் காசிபாளையம் பகுதியில் போலீசாருக்கான அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடம் கட்டும் பணி மந்த கதியில் நடைபெற்று வருகிறது. இதனை விரைந்து முடிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. திருப்பூர் மாநகர் மற்றும் மாவட்டம் முழுவதும் சுமார் 2 போலீசார் பணியாற்றி வருகின்றனர். முதல்நிலை காலவர், தலைமை காவலர், உதவி ஆய்வாளர், ஆய்வாளர் என பல்வேறு பிரிவுகளில் இவர்கள் பணியாற்றி வருகின்றனர். இதில் பெரும்பாலான போலீசார் குடும்பத்தோடு வாடகை வீடுகளில் வசித்து வருகின்றனர்.  இந்நிலையில் போலீசாருக்கான அடுக்குமாடி குடியிருப்பு பணி திருப்பூர் காங்கயம் ரோட்டிலுள்ள காசிபாளையம் பகுதியில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு துவங்கப்பட்டது.

 இரண்டு ஆண்டுகளாக நடந்து வரும் இந்த பணிகள் இதுவரை முடிக்கப்படாமல் மந்தகதியில் நடந்து வருகிறது. இதுகுறித்து மாநகர போலீசார் கூறுகையில்: போலீசாருக்கு அரசின் சார்பில் குடியிருப்புகள் வழங்கபடும் என்ற அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. திருப்பூர் போலீசாருக்கான அடுக்குமாடி குடியிருப்பு காசிபாளையம் பகுதியில் கட்டி வருகின்றனர். இன்னும் அந்த நிறைவடையாமல் உள்ளது. இந்த அடுக்குமாடி குடியிருப்பு கட்டிட பணிகளை விரைந்து முடித்தால் தகுதியுள்ள அனைவருக்கு குடியிருப்புகள் கிடைக்கும். இவ்வாறு கூறினார்.

Related Stories: