×

அதிகபாரம் ஏற்றி செல்லும் வாகனங்களால் விபத்து அபாயம்

திருப்பூர், ஜூலை 18:திருப்பூரில் சரக்கு வாகனங்களில் அதிக பாரம் ஏற்றி செல்வது அதிகரித்துள்ளது.திருப்பூரின் பிரதான தொழிலாக பின்னலாடை மற்றும் அதன் சார்பு தொழில்கள் உள்ளது. அதுமட்டுமல்லாமல் விசைத்தறி மற்றும் விவசாயம் போன்ற தொழில்கள் நடைபெற்று வருகிறது. இவைகளில் பணியாற்றுவதற்காக வெளி மாவட்டம் மட்டுமல்லாமல் வெளி மாநிலங்களிலிருந்தும் தொழிலாளர்கள் திருப்பூர் பகுதிக்கு வருகின்றனர்.  திருப்பூர் பகுதியில் உள்ள சரக்கு வாகனங்கள் பெரும்பாலும் பனியன் துணிகள் மற்றும் கட்டுமான பொருட்கள் கம்பிகள் போன்ற பொருட்களை எடுத்துசெல்கிறார்கள். இந்நிலையில் சரக்கு வாகனத்தில் பாரத்தை குறிப்பிட்ட எடை தான் அனுமதிக்க வேண்டும் என்ற சட்டம் உள்ள நிலையில், செலவை குறைப்பதற்காக ஒரு வாகனத்தில் அதிக எடையை ஏற்றி செல்வது வழக்கமாகிவிட்டது. கடந்த சில மாதங்களுக்கு முன்னர் போக்குவரத்து போலீசார் அதிகபாரம் ஏற்றிய சரக்கு வாகனங்களுக்கு அபராதம் விதித்தனர். அதனையும் பொருட்படுத்தாத சில சரக்கு வாகனங்கள் அதிக பாரம் ஏற்றி செல்வது வாடிக்கையாகிவிட்டது. போக்குவரத்து போலீசாரும் கண்டும் காணாமல் உள்ளனர். இதுகுறித்து வாகன ஓட்டிகள் கூறியதாவது: திருப்பூர் மாநகரப்பகுதியில் சரக்கு வாகனங்களில் அதிக பாரம் ஏற்றி செல்வதால் அதிக விபத்துகள் ஏற்படுகிறது. இதனை போக்குவரத்து போலீசாரும், வட்டார போக்குவரத்து அதிகாரிகளும் கண்டுகொள்வதில்லை. இந்த வாகனங்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தனர்.

Tags :
× RELATED காங்கயம் அருகே சாலையோரம் புதரில் திடீர் தீ