×

இவ்வாறு ராசா பேசினார். கூடலூர் அருகே யானை நடமாட்டம் : மக்கள் பீதி

கூடலூர், ஜூலை 18:கூடலூர் அருகே சுற்றபுற கிராமங்களில் இரவு நேரத்தில் யானை புகுந்து வருவதால் மக்கள் பீதியடைந்துள்ளனர். கூடலூரை அடுத்துள்ள தேவர்சோலை பேரூராட்சிக்கு உட்பட்ட  மச்சிகொல்லி, பேபிநகர், செம்பகொல்லி, மட்டம், ஒற்றுவயல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு இரவு நேரத்தில் வரும் ஒற்றை யானை  இங்கு உள்ள விவசாய ேதாட்டத்தில் நுழைந்து வாழை. தென்னை பாக்கு உள்ளிட்ட பயிர்களை சேதப்படுத்தி செல்கின்றது. இரவு 8 மணிக்கு வரும் காட்டு யானை அதிகாலை 6 மணி வரை கிராமங்களுக்குள் சுற்றித்திரிகிறது. யானை நடமாட்டம் காரணமாக வெளியிடங்களில் இருந்து இரவு நேரத்தில் கிராமங்களுக்குள் வரும் பொதுமக்களும் காலை நேரத்தில் வெளியே செல்லும் தொழிலாளர்கள் பள்ளி கல்லூரி மாணவர்களும் அச்சத்துடனே நடமாட வேண்டிய சூழ்நிலை உள்ளது. மேலும், இப்பகுதிகளில் அடிக்கடி மின்வெட்டு ஏற்படுவதால் யானை நடமாட்டம் குறித்து அறிந்துகொள்ள முடியாத சூழல் உள்ளது. எனவே வனத்துறையினர் கிராமங்களுக்குள் நடமாடும் இந்த ஒற்றை யானையை அடர் வனப் பகுதிக்குள் விரட்டுவதோடு மீண்டும் கிராமங்களுக்குள் வராமல் கண்காணிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

Tags :
× RELATED நீலகிரி மாவட்டத்தில் வாக்குச்சாவடி...