போலீசாருக்கு 32 இ செலான் கருவி

கோவை, ஜூலை 18:  கோவை மாநகர போலீசில் போக்குவரத்து போலீசார் கையடக்க இ செலான் கருவி மூலமாக போக்குவரத்து விதிமுறை மீறல் தொடர்பாக அபராதம் வசூலித்து வருகின்றனர்.  நகரில் 15 இ செலான் கருவிகள் மூலமாக அபராதம் வசூலிக்கப்படுகிறது. மேலும் 32 இ செலான் கருவி பெற போக்குவரத்து போலீசாருக்காக பெறப்பட்டுள்ளது.  இந்த இ செலான் கருவிகள் தேசிய தகவல் மையத்தின் மூலமாக தயாரிக்கப்பட்ட சாப்ட்வேர் மூலமாக இயங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. சிம்கார்டு பயன்படுத்தி இந்த கருவிகளில் அபராத தொகை விவரங்களை பதிவு செய்யலாம். போக்குவரத்து அலுவலகங்களில் பயன்பாட்டில் உள்ள வாகன், சாரதி ஆகிய ஆன்லைன் கண்காணிப்பு பிரிவிற்கும் இ செலான் கருவிகளில் அபராதம் விதிக்கப்பட்ட வாகனங்களின் விவரங்கள் அனுப்பி வைக்கப்படும். இதன் மூலமாக வாகன ஓட்டிகளின் உரிமம் ரத்து செய்வது தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும்.  கோவை நகர போக்குவரத்து பிரிவில் 32 இ செலான் கருவிகள் விரைவில் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும். இதன் மூலமாக நகரில் போக்குவரத்து விதிமுறை மீறல் தொடர்பாக அபராத வசூல் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Tags :
× RELATED கோவை மாவட்டத்தில் 228 ஊராட்சிகளுக்கு தேர்தல் நாளை முதல் வேட்பு மனு தாக்கல்