பான்மசாலா விற்ற 76 பேர் கைது

ேகாவை, ஜூலை 18:  கோவை நகரில் செல்வபுரம், சாயிபாபா காலனி, வெரைட்டிஹால் ரோடு, ரேஸ்கோர்ஸ், சரவணம்பட்டி, காட்டூர், ராமநாதபுரம், பீளமேடு, சிங்காநல்லூர், குனியமுத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் தடை ெசய்யப்பட்ட பான்பராக், குட்கா, பான் மசாலா பொருட்கள் விற்பனை தொடர்பாக போலீசார் நேற்று முன் தினம் சோதனை நடத்தினர். இதில் 76 கடைகளில் இருந்து 2,310 பாக்கெட் பான் மசாலா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. 76 பேர் மீது வழக்கு பதிவு செய்து அபராதம் விதிக்கப்பட்டது. தடை செய்யப்பட்ட பான் மசாலா பொருட்களை பதுக்கி விற்க கூடாது. மீறினால் புகையிலை தடை சட்டத்தின் படி வழக்கு பதிவு செய்யப்படும் என போலீசார் எச்சரித்தனர்.


Tags :
× RELATED கோவை மாவட்டத்தில் 228 ஊராட்சிகளுக்கு தேர்தல் நாளை முதல் வேட்பு மனு தாக்கல்