கோவை-பொள்ளாச்சி இடையே கூடுதல் ரயில் இயக்க கோரிக்கை

பொள்ளாச்சி, ஜூலை 18: பொள்ளாச்சி ரயில் பயணிகள் நலச்சங்க செயற்குழு கூட்டம் நேற்று நடைபெற்றது.சங்க தலைவர் ராஜசேகரன் தலைமை தாங்கினார். துணை தலைவர் கிருஷ்ணகுமார், செயலாளர் மோகன்ராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தின்போது, கோவையிலிருந்து பொள்ளாச்சிக்கு இயக்கப்படும் ரயில் மற்றும் கோவையிலிருந்து  மதுரைக்கு இயக்கப்படும் பயணிகள் ரயிலை நிரந்தரமாக்க வேண்டும். பொள்ளாச்சியிலிருந்து கோவை செல்லும் ரயிலின் வேகத்தை அதிகப்படுத்தி அந்த ரயில் மேட்டுபாளையம் வரை நீட்டிக்க வேண்டும். பயணிகள் நலன்கருதி, செல்போன் செயலியை பயன்படுத்தி டிக்கெட் எடுப்பது குறித்து ரயில்வே ஸ்டேஷனில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். தற்போது கோவை ரோட்டில் பல்வேறு இடங்களில் நடக்கும் பாலம் கட்டும் பணிகளால், பஸ்கள் சுற்றி செல்கிறது.  இதனால், பயணிகள் பலரும் ரயிலில் பயணம் செய்கின்றனர். எனவே, பொள்ளாச்சியிலிருந்து கோவைக்கு கூடுதல் ரயில் இயக்கப்படுவதுடன். ஞாயிற்றுக்கிழமையிலும் பயணிகள் ரயில் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
Advertising
Advertising

Related Stories: