100 நாள் வேலை திட்டத்தில் தூர்வாரப்படும் நீர்நிலை எத்தனை? நிதி எவ்வளவு? அறிக்கை தர மாநில அரசுக்கு உத்தரவு

கோவை, ஜூலை 18: தமிழகத்தில் தூர்வாரப்பட்டுவரும் ஏரி, குளங்கள் உள்ளிட்ட நீர் நிலைகள் எத்தனை. அதற்காக மத்திய அரசால்  ஒதுக்கப்பட்ட நிதி எவ்வளவு என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு தமிழக அரசு மற்றும் மத்திய அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.கோவை மாட்டம் குனியமுத்தூர் பகுதியில் உள்ள ராஜவாய்க்காலை தூர் வார உத்தவிடக்கோரி உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடரப்பட்டது.இந்த வழக்கு நீதிபதிகள் மணிக்குமார், சுப்பிரமணியம் பிரசாத் ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது.

Advertising
Advertising

அப்போது கூடுதல் அரசு பிளீடர் மனோகரன் ஆஜராகி, ராஜா வாய்க்கால் காலமுறை அடிப்படையில் தூர்வாரப்படுகிறது என்று தெரிவித்தார்.இதைக்கேட்ட நீதிபதிகள், தமிழகத்தில் உள்ள நீர் நிலைகள் சரியான முறையில் தூர்வாரப்படுகின்றனவா என்று கேட்டனர். அதற்கு அரசு வக்கீல், ஏரி குளங்கள் தூர்வாரப்பட்டு வருகின்றன. அதற்காக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என்றார்.இதைக்கேட்ட நீதிபதிகள், தமிழகத்தில் உள்ள ஏரி, குளங்கள் உள்ளிட்ட நீர்நிலைகள் எத்தனை?. இவற்றில் எத்தனை நீர்நிலைகள் தூர்வாரப்படுகின்றன. இதற்காக மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தில் எவ்வளவு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. ஜூலை 26ம் தேதி வரை எத்தனை கிராமங்களில் ஏரி, குளங்கள் தூர்வாரப்பட்டன என்ற விபரங்களை பொதுப்பணித் துறை செயலாளர் மற்றும் நகராட்சி நிர்வாக

செயலாளர்  ஆகியோரும் மத்திய அரசும் வரும் 26ம் தேதிக்குள் அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டனர். வழக்கு வரும் 29ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

Related Stories: