தெய்வேந்திரன் நாடார் அறக்கட்டளை சார்பில் நலத்திட்ட உதவிகள்

கோவை, ஜூலை18: கோவை ஆர்.எஸ்.புரத்தில் உள்ள ஆர்.கே.தெய்வேந்திரன் நாடார் அறக்கட்டளை சார்பில் காமராஜர் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. இதனையொட்டி, அலங்கரிக்கப்பட்ட காமராஜர் படத்திற்கு அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் ரத்னமாலா ராஜேஷ் மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் 26 ஏழை எளிய மாணவர்களுக்கு ரூ.5 லட்சம் மதிப்பிலான கல்வி உதவித்தொகை மற்றும் மருத்துவ உதவித்தொகையையும் வழங்கினார். இதில் தெய்வேந்திரன் நாடார் நற்பணி மன்ற நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர். விழாவிற்கான ஏற்பாடுகளை மேலாளர் ஜெபசீலன் செய்திருந்தார்.

Tags :
× RELATED கோவை மாவட்டத்தில் 228 ஊராட்சிகளுக்கு தேர்தல் நாளை முதல் வேட்பு மனு தாக்கல்