மணப்பெண்களுக்கான சிந்தூரம் கலெக்ஷன் கீர்த்திலால்ஸில் அறிமுகம்

கோவை, ஜூலை18: கோவை கிராஸ்கட் ரோட்டில் உள்ள கீர்த்திலால்ஸ் ஷோரூமில் மணப்பெண்களுக்கான பிரத்யோக வைர ஆபரண கலெக்சனான சித்தூரம் 2 அறிமுகம் செய்யப்பட்டது. தனித்துவமான வடிவமைப்பை கொண்ட நெக்லஸ், ஆரம், வளையல்கள், காதணிகள் மற்றும் ஒட்டியாணம் உள்ளிட்ட நகைகள் இந்த கலெக்சனில் உள்ளது. இதன் அறிமுக விழாவில் பேசிய கீர்த்திலால்ஸ் பிசினஸ் செயல் உத்தி இயக்குனர் சூரஜ் சாந்தகுமார் பேசியதாவது, ஒரு பெண்ணின் வாழ்க்கையில் முக்கிய தினமாக இருக்கின்ற திருமண நாளின் ஆனந்தத்தையும், முக்கியத்துவத்தையும் மேலும் உயர்த்தி மேம்படுத்துவதற்காகவும் இந்த கலெக்ஷன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. புதிய, மிக அழகான மற்றும் வியப்பில் ஆழ்த்துகின்ற ஆபரணங்களையே வாடிக்கையாளர்கள் எப்போதும் விரும்புகின்றனர். கிர்த்திலால்ஸின் உயர்தரத்தை இன்னும் வலுவாக நிலைநாட்டும் இந்த சிந்தூரம் கலெக்சன், எமது வாடிக்கையாளர்களுடனான நல்லுறவை இன்னும் சிறப்பாக உறுதி செய்யும் இவ்வாறு அவர் கூறினார்.Tags :
× RELATED கோவை மாவட்டத்தில் 228 ஊராட்சிகளுக்கு தேர்தல் நாளை முதல் வேட்பு மனு தாக்கல்