அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

கோவை, ஜூலை 18:  கோவை தெற்கு தாலுக்காக அலுவலகம் முன்பு தமிழ்நாடு அரசு பணியாளர் சங்கத்தின் சார்பில் 15 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சங்கத்தின் மாவட்ட தலைவர் அய்யப்பன் தலைமை வகித்தார். லோகநாதன் முன்னிலை வகித்தார். இதில், புதிய ஓய்வூதியத்தை ரத்து செய்ய வேண்டும். போக்குவரத்து துறையில் கடந்த 4 ஆண்டுகளாக காலியாக உள்ள சுமார் 130 கண்காணிப்பாளர் பணியிடங்களை நிரப்ப வேண்டும். மத்திய அரசு பணியாளர்களுக்கு இணையான படிகள், போனஸ் வழங்க வேண்டும்.

Advertising
Advertising

டாஸ்மாக் பணியாளர்களை பணி நிரந்தரம் செய்து காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். அவுட்சோர்சிங் நியமனத்தை ஓழிக்க வேண்டும். மக்கள் தொகை அடிப்படையில் ஊராட்சிகளை, பேரூராட்சிகளாக மாற்ற வேண்டும். பணி நியமனம், பணியிட மாறுதல், பதவி உயர்வு ஆகியவற்றில் உள்ள குறைபாடுகள், முறைகேடுகள் சரிசெய்ய வேண்டும் உள்ளிட்ட 15 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Related Stories: