×

சத்தி நகர திமுக., சார்பில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு சீருடை

சத்தியமங்கலம், ஜூலை 18:    மறைந்த திமுக தலைவர் கருணாநிதி பிறந்தநாளை முன்னிட்டு திமுக., சார்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. நேற்று சத்தியமங்கலம் நகர திமுக., சார்பில் நகராட்சி நடுநிலை பள்ளியில் நடந்த மாணவ, மாணவிகளுக்கான சீருடை வழங்கும் நிகழ்ச்சி நகர பொறுப்பாளர் ஜானகி தலைமையில் நடந்தது. இதில் ஈரோடு வடக்கு மாவட்ட செயலாளர் நல்லசிவம் கலந்துகொண்டு 50 மாணவ, மாணவியருக்கு சீருடைகளை வழங்கினார். பள்ளிக்கு சமையல் அண்டா வழங்கப்பட்டது.   நிகழ்ச்சியில் நகர பொறுப்புக்குழு உறுப்பினர்கள், வார்டு செயலாளர்கள், வார்டு பிரதிநிதிகள், மாவட்ட, நகர சார்பு அணி அமைப்பாளர்கள், நகர கழக நிர்வாகிகள் கலந்துகொண்டனர். இதைத்தொடர்ந்து சத்தியமங்கலம் பஸ் நிலையம் அருகே செட்டிநாடு ஹாலில் நகர செயற்குழு கூட்டம் நடந்தது. கூட்டத்தில் கலந்து கொண்ட மாவட்ட செயலாளர் நல்லசிவம் நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் பணிபுரிந்த கழக நிர்வாகிகளுக்கு பொன்னாடை போர்த்தி கவுரவித்தார்.

Tags :
× RELATED வீட்டில் மது பாட்டில்கள் பதுக்கி விற்றவர் உட்பட 3 பேர் கைது