உடற்கல்வி இயக்குநருக்கு விருது

ஈரோடு, ஜூலை 18:  ஈரோடு வாசவி கல்லூரி உடற்கல்வி இயக்குநருக்கு விளையாட்டு கலை சுடர் விருது வழங்கி கவுரவிக்கப்பட்டார்.  ஈரோடு வாசவி கல்லுரியின் உடற்கல்வி இயக்குநராக பணியாற்றி வருபவர் ரமேஷ். இவர் கடந்த 37 ஆண்டுகளில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நீச்சல் வீரர்களை உருவாக்கி சாதனை புரிந்துள்ளார். தனிப்பட்ட முறையில் 800க்கும் மேற்பட்ட விளையாட்டு போட்டிகளை நடத்தி உள்ளார். பல்வேறு பல்கலைக்கழக வீரர்களை உருவாக்கி உள்ள உடற்கல்வி இயக்குநர் ரமேஷின் வழிகாட்டுதலின் பேரில் 100க்கும் மேற்பட்டவர்கள் அரபு நாடுகளில் பணியாற்றி வருகின்றனர்.  இந்நிலையில் கன்னியாகுமரியில் உள்ள விவேகானந்தர் கேந்திரத்தில் நடந்த இந்திய இயற்கை மருத்துவ கவுன்சிலின் 6வது மாநில மாநாட்டில் உடற்கல்வி இயக்குநர் ரமேஷின் சாதனையை பாராட்டி “விளையாட்டு கலை சுடர் விருது” வழங்கப்பட்டது.  இந்த விருதினை நீதிபதி சுவாமிதுரை, இந்திய இயற்கை மருத்துவ கவுன்சில் தலைவர் டாக்டர் வெங்கடாச்சலம் ஆகியோர் வழங்கி கவுரவித்தனர். விருது பெற்ற உடற்கல்வி இயக்குநரை வாசவி கல்லூரி தலைவர் சுதாகர், செயலாளர் முதல்வர் ஜெயக்குமார், இயக்குநர் சிவக்குமார் மற்றும் உடன் பணியாற்றும் ஆசிரியர்கள், அலுவலர்கள் பாராட்டினர்.

Advertising
Advertising

Related Stories: