×

விளைநிலங்களில் விழுந்து கிடக்கும் மின்கம்பங்கள் விவசாயப் பணிகளுக்கு இடையூறு

ராஜபாளையம், ஜூலை 18: ராஜபாளையம் பகுதியில் விளைநிலங்களில் சாய்ந்து கிடக்கும் மின்கம்பங்களால் விபத்து அபாயமும், விவசாயப் பணிகளுக்கு இடையூறும் ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் குற்றம்சாட்டுகின்றனர். ராஜபாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதியில் உள்ள விளைநிலங்களில் ஆங்காங்கே மின்கம்பங்கள் சாய்ந்து கிடக்கின்றன. இவற்றால் விவசாயிகளுக்கும், கால்நடைகளுக்கும் மின்விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. இதனை சீரமைக்க மின்வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காமல் உள்ளனர்.

இது குறித்து விவசாயிகள் கூறுகையில், ‘கடந்த சில ஆண்டுகளாக போதிய மழை இல்லாததால், கிணறுகளில் தண்ணீர் இல்லை. இந்நிலையில், விளைநிலங்களில் ஆங்காங்கே மின்கம்பங்கள் சாய்ந்து கிடக்கின்றன. இவைகளை சீரமைக்க மின்வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. தற்போது விவசாயப் பணிகள் குறைவாக உள்ள நிலையில், இவைகளை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கிணறு இல்லாத பகுதியில் ஆழ்துளை கிணறு அமைத்து, விவசாயம் செய்ய இலவச மின்சாரம் வழங்குவதை தற்போதைய அரசு நிறுத்தியுள்ளது எனவே, விவசாய பணிகளுக்கு தடையாக இருக்கும் மின்கம்பங்களை சீரமைக்க வேண்டும். விவசாயப் பணிகளை ஊக்கப்படுத்த மின்சாரம் வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.




Tags :
× RELATED செங்கமலநாச்சியார்புரம் ஊராட்சிக்கு...