‘ஜோதிட ரத்னா’ கே.பி.வித்யாதரன் பாளையம் பைபாஸில் சுகாதார வளாகம் பணி துவங்கியது

உத்தமபாளையம், ஜூலை 18: உத்தமபாளையம் பைபாஸ் சாலையில் பொதுமக்களின் நீண்ட கால கோரிக்கையான சுகாதார வளாகம் கட்டும் பணி தொடங்கி உள்ளது.உத்தமபாளையம் பைபாஸ் சாலையில் தாசில்தார், அரசு மருத்துவமனை, ஆர்டிஓ, கால்நடைத்துறை உள்ளிட்ட பல்வேறு அலுவலகங்கள் இங்கு அமைந்துள்ளன. இதனால் அதிக அளவில் வெளியூர் பயணிகள் இங்கு வருகின்றனர். அத்துடன் சுற்றுலா செல்லும் பயணிகளும் வருகின்றனர். எனவே இங்கு சுகாதார வளாகம் அமைக்கப்படவேண்டும். இதில் பெண்கள், ஆண்கள் தனித்தனியாக பயன்படும் வகையில் கழிப்பறைகள் கட்டப்படவேண்டும் என பொதுமக்கள் நீண்ட நாட்ளாக கோரிக்கை விடுத்து வந்தனர். இதுகுறித்து தினகரன் நாளிதழ் பலமுறை செய்தியாக வெளியிட்டது.

இந்நிலையில் உத்தமபாளையம் சப்-கலெக்டர் வைத்திநாதன் உத்தமபாளையம் பேரூராட்சி அதிகாரிகளை அழைத்து பைபாஸ் சாலையில்  சுகாதார வளாகம் கட்டுவதற்கு  உத்தரவிட்டார். இதன்படி இப்போது கட்டுமானப் பணி தொடங்கி உள்ளது. இதற்காக போர்வெல் போடப்பட்டுள்ளது. 10 கழிப்பறைகள் வரும் வகையில் கட்டப்பட உள்ளது. இதனால் பொதுமக்கள் பெரிதும் பயன்பெறுவார்கள்.இதுகுறித்து ஜெகதீசன் கூறுகையில், `` மக்கள் பயன்படும் வகையில் சுகாதார வளாகம் கட்டுவதற்கு உரிய நடவடிக்கை எடுத்துள்ள பேரூராட்சி நிர்வாகத்தை பாராட்டுகிறோம். உடனடியாக அனுமதி பெற்றுதந்த சப்-கலெக்டர்க்கு எங்களது நன்றியை தெரிவித்து கொள்கிறோம்’’ என்றனர்.

Tags :
× RELATED குடியுரிமை சட்டத்தை எதிர்த்து திமுக...