போடி மக்கள் புகார் நட்டாத்தி நாடார் மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கு காமராஜர் பேத்தி ஆசீர்வாதம்தேனி, ஜூலை 18: தேனி நட்டாத்தி நாடார் மருத்துவமனையில் ஜூலை 15ம் தேதி பிறந்தநாளன்று பிறந்த 4 குழந்தைகளுக்கு, காமராஜர் பேத்தி கமலிகா ஆசீர்வதித்து பரிசுகள் வழங்கினார்.தேனி நட்டாத்தி நாடார் மருத்துவமனை தொடங்கப்பட்டு 77 ஆண்டுகள் ஆனதை கொண்டாடும் வகையிலும், காமராஜரின் 117 வது பிறந்தநாளை கொண்டாடும் வகையிலும் மருத்துவமனையில் ஜூலை 7 ம் தேதி முதல் 31ம் தேதி வரை 77 கர்ப்பிணிகளுக்கு இலவசமாக பிரசவம் பார்க்கும் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின் கீழ் கடந்த ஜூலை 15ம் தேதி காமராஜரின் பிறந்தநாளன்று நான்கு குழந்தைகள் பிறந்தன. இந்த குழந்தைகளை காமராஜரின் பேத்தி கமலிகா நேரில் சென்று ஆசீர்வதித்து பரிசுகள் வழங்கினார். ஒரு ஆண் குழந்தைக்கு காமராஜர் என்று பெயர் சூட்டினார். நட்டாத்தி நாடார் உறவின்முறை தலைவர் மாரீஸ்வரன், செயலாளர் கமலகண்ணன் மற்றும் டாக்டர்கள், நிர்வாகிகள் உடன் இருந்தனர்.


Tags :
× RELATED கேரள மருத்துவக்கழிவுகளைகொட்டினால்...