உத்தமபாளையத்தில் நாளை வேலைவாய்ப்பு முகாம்

உத்தமபாளையம், ஜூலை 18: உத்தமபாளையத்தில் படித்து வேலையில்லாமல் உள்ள பட்டதாரிகள் பயன்பெறும் வகையில் நாளை ( ஜூலை19 ) வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. இதுகுறித்து உத்தமபாளையம் சப்-கலெக்டர் வைத்திநாதன் வெளியிட்டுள்ள அறிக்கை: உத்தமபாளையம் பைபாஸ் சாலையில் உள்ள கனிப்பிரியா திருமண மண்டபத்தில் ஜூலை 19ம் தேதி பத்தாம்வகுப்பு, பிளஸ் 2, டிகிரி, ஐடிஐ, டிப்ளமோ படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை அளித்திடும் வகையில் தேனி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம், உத்தமபாளையம் சப்-கலெக்டர் அலுவலகம் இணைந்து இம்முகாமினை நடத்துகிறது. இதில் தகுதி உள்ள 18 முதல் 45 வயதினை அடைந்துள்ள அனைவரும் கலந்து கொள்ளலாம். இதில் ஒரிஜினல் கல்வி சான்றிதழ்கள், மற்றும் நகல், ஆதார், ரேஷன்அட்டையின்  நகல்கள், போட்டோக்கள், மற்றும் பயோடேட்டா உள்ளிட்டவைகளை கொண்டு வந்து நேரில் கலந்து கொள்ளலாம். இதில் தமிழகத்தின் முன்னணி நிறுவனங்கள் கலந்து கொண்டு வேலைவாய்ப்பை அளிக்க உள்ளன.

Tags :
× RELATED திறப்புவிழா கண்ட சில நாட்களிலேயே...