கலெக்டரிடம் பெண்கள் கேள்வி ஆக்கிரமிப்புகளால் நூறாண்டாகியும் தரம் உயராத கள்ளர் பள்ளி

போடி, ஜூலை 18:  நூறாண்டுகள் கடந்த அரசு கள்ளர் பள்ளி தரம் உயர்த்த தடையாக இருக்கும் ஆக்கிரமிப்புகளை மாவட்ட நிர்வாகம் அகற்ற வேண்டும் என்று சமூக ஆர்வலர்களும், பொதுமக்களும் வலியுறுத்தியுள்ளனர்.போடிநாயக்கனூர் கீழத்தெரு ஜமீன் தோப்பு தெருவில் 1914ம் ஆண்டு முதல் அரசு கள்ளர் நடுநிலைப் பள்ளி நடந்து வருகிறது. மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை கள்ளர் சீரமைப்பு துறை கட்டுப்பாட்டில் இப்பள்ளி இயங்கி வருகிறது.கடந்த 105 ஆண்டுகளாக 1 முதல் 8 ம் வகுப்பு வரையில் ஆரம்பத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்கள் படித்தனர். தனியார் பள்ளிகளின் ஆங்கில வழிக்கல்வியால்அரசு பள்ளியின் மாணவர்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்தது. தற்போது கள்ளர் பள்ளியில் 46 மாணவ, மாணவியர்கள் படிக்கின்றனர். தலைமை ஆசிரியர் உள்பட 5 ஆசிரியர்களில் மாணவர்களின் எண்ணிக்கை குறைவின் காரணமாக இரண்டு ஆசிரியர்கள் வேறு கிராம அரசு பள்ளிகளுக்கு டெபுடேஷனில் செல்கின்றனர். இந்த பள்ளியின் விளையாட்டு மைதானத்தில் பாதி இடம் ஆக்கிரமிக்கப்பட்டு வீடுகளாக மாறியுள்ளதால் விளையாடுவதற்கு இடம் இல்லாததால் பள்ளி மாணவர்களை விளையாடுவதற்கு அழைத்து செல்வதில்லை. மாறாக விளையாட்டு பீரிடினை எடுத்து விட்ட
னர்.

ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள பள்ளியின் விளையாட்டு மைதானத்தை முழுமையாக மீட்டெடுக்க தேனி மாவட்ட கலெக்டர் மற்றும் கல்வி துறை அதிகாரிகளிடம் புகார்கள் கொடுத்தும் இதுவரையில் நடவடிக்கை எடுக்கப்படவில்லையென புகார் கூறப்படுகிறது.
ஆக்கிரமிப்பு பகுதி நகராட்சி விஷயம் தெரிந்துள்ளதால் தார்ச்சாலை வசதி ஏற்படுத்தவில்லை. இந்த நிலையில் பள்ளியில் வேலை செய்யும் ஆசிரியர்கள் சிரத்தை எடுத்து மாணவர்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்தும் வகையில் ஆர்வம் காட்டி வேலை செய்து வருகின்றனர். 105 ஆண்டுகளை தாண்டிய நிலையில் உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளியாக தரம் உயர்த்துவதற்கான வேலைகளில் இறங்கியுள்ளனர். பள்ளியில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றினால் உயர்நிலையாக தரம் உயர்த்தி புதிய வகுப்பு கட்டிடங்கள் ஏற்படுத்த முடியும். ஆனால், அதற்கு ஆக்கிரமிப்புகள் பெரும் தடையாக உள்ளது.மேலும் பள்ளிக்கு குடிநீர் வசதி இல்லாததால் வெளியில் இருந்து கேன் தண்ணீர் வாங்கி மாணவர்களுக்கு பயன்படுத்துகின்றனர்.  கழிப்பறை உள்ளிட்ட பிறதேவைகளுக்கு பயன்படுத்த பயன்பட்ட ஆழ்குழாயும் பழுதாகி கிடக்கிறது. இதனை பழுதுநீக்க வேண்டும்.எனவே, தேனி மாவட்ட நிர்வாகமும், கள்ளர் சமூகநலத்துறையும் சேர்ந்து இந்த பள்ளியின் உயர்விற்கு தடையாக இருக்கும் ஆக்கிரமிப்புகளை அகற்றி விளையாட்டு மைதானத்தை மீட்டெடுத்து சுற்றுச்வர் எழுப்ப வேண்டும் என சமூக ஆர்வலர்களும், இப்பகுதி மக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags :
× RELATED மூணாறில் துணை ஆட்சியர் அலுவலகத்தை ஆதிவாசி மக்கள் முற்றுகை