உத்தமபாளையத்தில் ஜூலை 20ல் மின்தடை

உத்தமபாளையம், ஜூலை 18: உத்தமபாளையத்தில் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை மறுநாள் (ஜூலை 20) மின்சாரம் விநியோகம் இருக்காது. உத்தமபாளையம் துணைமின்நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடக்க உள்ளதால் 20ம் தேதி  உத்தமபாளையம், பண்ணைப்புரம், கோம்பை, ராயப்பன்பட்டி, உ.அம்மாபட்டி, ஆனைமலையன்பட்டி, கோகிலாபுரம், அம்பாசமுத்திரம், ராமசாமிநாயக்கன்பட்டி உள்ளிட்ட ஊர்களில் காலை 9.45 மணி முதல் மாலை 4.45 மணி வரை மின்சாரம் விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.


Tags :
× RELATED பெனடிக்ட் மெட்ரிக் பள்ளியில் சமத்துவ பொங்கல் கொண்டாட்டம்