மாவட்டம் ஜாமீனில் சென்றவரை கைது செய்ய வேண்டும் தலைமை எழுத்தர் புகார்

பெரியகுளம்,ஜூலை 18: பெரியகுளம் அருகே பொம்மிநாயக்கன்பட்டி சேர்ந்தவர் கலைச்செல்வம் (52). இவர் பெரியகுளம் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் 2016ம் ஆண்டு செப். 14ல் ஜாமீனில் சென்றார். இதன் பின் விசாரணைக்கு நீதிமன்றம் வராமல் இருந்துள்ளார். இதனால் கலைச்செல்வம் மீது நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்தது. நீதிமன்ற தலைமை எழுத்தர் பாண்டிச்செல்வி, தென்கரை போலீசில் கலைச்செல்வன் மீது புகார் கொடுத்துள்ளார். இதையடுத்து போலீசார் கலைச்செல்வத்தை தேடி வருகின்றனர்.


Tags :
× RELATED தப்புக்குண்டுவில் சரியான வளர்ச்சி...