தலையாரிக்கு மிரட்டல்

ராமநாதபுரம், ஜூலை 18: ராமநாதபுரம் அருகே சிக்கல் கிராமத்தில் தலையாரியாக வேலை பார்ப்பவர் ராமநாதபுரத்தை சேர்ந்த கோபால் மனைவி பரமேஸ்வரி(42). கடந்த 15ம் தேதி சொக்கானை கிராமத்தை சேர்ந்த சக்திவேல்(45) வாரிசு சான்றிதழ் கேட்டு மனு அளித்துள்ளார். மனு மீதான விசாரணை நடத்த ஆர்ஐ ஹேமா, விஏஓ ராஜன், தலையாரி பரமேஸ்வரி ஆகியோர் சென்றுள்ளனர். கிராமத்தில் சக்திவேல் பற்றிய தகவல்களை விசாரணை நடத்தி விட்டு அலுவலகத்திற்கு வந்துள்ளனர்.இந்நிலையில் சிக்கல் கிராம உதவியாளர் அலுவலகத்திற்கு வந்த சக்திவேல், ஊரில் பெரிய மனிதராக உள்ள என்னை பற்றி எப்படி விசாரிக்கலாம் என கேட்டு தகராறில் ஈடுபட்டதாகவும், பெண் ஊழியர் என்று பாராமல் தகாத வார்த்தைகளில் பேசி கொலை மிரட்டலும் விடுத்ததாகவும் தலையாரி பரமேஸ்வரி சிக்கல் போலீசில் புகார் கொடுத்தார். இன்ஸ்பெக்டர் அனிதா வழக்குப்பதிந்து சக்திவேலை கைது செய்து சிறையில் அடைத்தனர்.கொலை மிரட்டல், அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தது, பெண் ஊழியரை தகாத வார்த்தைகளில் பேசியது என வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

Tags :
× RELATED இளையான்குடி பகுதியில் பல ஆண்டுகளாக பாசன மடைகள் சேதம்