100 சதவீதம் மானியத்தில் பண்ணைக்குட்டை அமைக்க விவசாயிகள் விண்ணப்பிக்கலாம்


சிவகங்கை, ஜூலை 18: சிவகங்கை மாவட்டத்தில் பண்ணைக்குட்டை அமைக்க விவசாயிகள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.சிவகங்கை கலெக்டர் ஜெயகாந்தன் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: சிவகங்கை மாவட்டத்தில் நடப்பு நிதியாண்டில் நபார்டு வங்கி நிதியுதவியுடன் 100 சதவீத மானியத்தில் 500 பண்ணைக்குட்டைகள் ரூ.5 கோடி செலவில் அமைக்கப்பட உள்ளன. 45 சென்ட் பரப்பளவில் 18 லட்சம் லிட்டர் நீர் சேமிக்கும் அளவிற்கு பண்ணைக்குட்டைகள் அமைத்து தரப்படுகின்றன. இதில் சேமிக்கப்படும் நீரின் மூலம் கூடுதல் மகசூல் பெற முடியும். இதில் மீன் வளர்ப்பதன் மூலம் லாபம் பெறலாம். பண்ணைக்குட்டை அமைக்க விவசாயிகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இத்திட்டத்தின் கீழ் பயன்பெற ஆர்வமுள்ள விவசாயிகள் உதவி செயற் பொறியாளர், வேளாண்மைப் பொறியியல் துறை, தொண்டி ரோடு, சிவகங்கை. செல் எண்.98941 33557, தொலைபேசி எண்: 04575 240288 என்ற முகவரியிலும், உதவி செயற் பொறியாளர், வேளாண்மைப் பொறியியல் துறை, எண்.1, புகழேந்தி தெரு, சூடாமணிபுரம், காரைக்குடி, செல் எண் 94436 85325, தொலைபேசி எண்: 04565 224598 என்ற முகவரியிலும் தொடர்பு கொள்ளலாம். மேலும், சிவகங்கை மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள வேளாண்மைப் பொறியியல்துறை, செயற்பொறியாளர்(வே.பொ) அலுவலகத்தையும், தொலைபேசி எண் 04575 240213 தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Tags :
× RELATED இளையான்குடி பகுதியில் பல ஆண்டுகளாக பாசன மடைகள் சேதம்