திறன் மேம்பாட்டு பயிற்சி

சிவகங்கை, ஜூலை 18: சிவகங்கை அருகே டி.ஆலங்குளம் கிராமத்தில் கூட்டுப்பண்ணைய திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட உழவர் உற்பத்தியாளர் குழு உறுப்பினர்களுக்கு வேளாண்மைத்துறை அட்மா திட்டத்தின்கீழ் திறன் மேம்பாட்டு பயிற்சி நடந்தது. வேளாண்மை துணை இயக்குநர்(உபநி) சசிகலா தலைமை வகித்தார். வேளாண்மை உதவி இயக்குர் பன்னீர்செல்வம், உதவி வேளாண்மை அலுவலர் விஜயகுமார், பிரியதர்ஷினி, வட்டார தொழில்நுட்ப மேலாளர் அன்பழகன், உதவி தொழில்நுட்ப மேலாளர்கள் சதீஷ், நந்தினி மற்றும் உழவர் உற்பத்தியாளர் குழு உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.


Tags :
× RELATED இளையான்குடி பகுதியில் பல ஆண்டுகளாக பாசன மடைகள் சேதம்