‘ஜோதிட ரத்னா’ கே.பி.வித்யாதரன் பல இடங்களில் தேங்கி கிடக்கிறது மாத கணக்கில் அள்ளப்படாத குப்பைகள்

சிவகங்கை, ஜூலை 18: சிவகங்கை நகர் முழுவதும் அள்ளப்படாமல் தேங்கும் குப்பைகளால் கடும் சுகதாரக்கேடு ஏற்பட்டுள்ளது.சிவகங்கை நகராட்சியில் 27 வார்டுகள் உள்ளன. சுமார் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வரும் இங்கு முக்கிய இடங்களில் மட்டும் லாரிகளில் குப்பைகளை எடுத்துச்செல்லும் வைகையில் இரும்பு குப்பை தொட்டிகள் வைக்கப்பட்டுள்ளன. ஏராளமான தெருக்களில் இதுபோல் தொட்டிகள் இல்லாமல் தெருவின் ஒரு பகுதி குப்பை கொட்டும் இடமாக பயன்படுத்தப்பட்டு அங்கிருந்து குப்பைகள் எடுத்துச்செல்லப்படும். தினந்தோறும் லாரிகளில் அள்ளப்பட்டு வந்தன. நகர் முழுவதும் பல இடங்களில் குப்பைகள் தேங்கி கிடக்கின்றன.

நேரு பஜார் பகுதியில் காய்கறி, மீன் மார்க்கெட், மளிகை கடைகள் உள்ளன. இப்பகுதியில் அதிகப்படியான குப்பைகள் சேரும். இதுபோல் உழவர் சந்தை, மஜீத்ரோடு, வேலாயுதசாமி கோவில் அருகில், சிவன் கோவில் அருகே என நகரின் முக்கிய பகுதிகளில் அதிகப்படியான குப்பைகள் சேரும். கடந்த பல மாதங்களாக நகரின் பல்வேறு பகுதிகளில் குப்பைகள் அள்ளப்படாமல் உள்ளன. பல நாட்களாக அள்ளப்படாத குப்பைகள் மற்றும் பாலித்தீன் பைகள் கழிவு நீர் கால்வாய்களுக்குள் செல்கிறது. இதனால் நகர் முழுவதும் பல இடங்களில் கழிவு நீர் கால்வாய்களுக்கும் குப்பைகள் தேங்கி நிற்கிறது. குப்பைகளால் கடும் துர்நாற்றம் வீசுகிறது. மாடு, நாய், பன்றி உள்ளிட்டவை குப்பைகளை சாலை முழுவதும் இழுத்து செல்கின்றன. இதனால் சாலை முழுவதும் குப்பைகள் சிதறிக்கிடக்கின்றன. எனவே குப்பைகளை அகற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.பொதுமக்கள் கூறியதாவது: பள்ளிகள் அருகே தேங்கும் குப்பைகளால் பள்ளிகளுக்குள் துர்நாற்றம் வீசுகிறது. குப்பைகளை தினந்தோறும் அள்ளாததால் பல தெருக்களில் செல்ல முடியாத அளவிற்கு துர் நாற்றம் வீசுகிறது. மழைக்காலங்களில் இதுபோல் செய்வதால் நோய் பரவும் நிலை ஏற்படுகிறது. உடனடியாக தினந்தோறும் குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.


Tags :
× RELATED இளையான்குடி பகுதியில் பல ஆண்டுகளாக பாசன மடைகள் சேதம்