×

அனுமதியின்றி மஞ்சுவிரட்டு 10 பேர் மீது வழக்குப்பதிவு

திருப்புத்தூர், ஜூலை 18: திருப்புத்தூர் அருகே கீரணிப்பட்டி கிராமத்தில் நேற்று அனுமதியின்றி மஞ்சுவிரட்டு நடத்தியதாக 10 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.திருப்புத்தூர் அருகே நாச்சியாபுரம் பகுதியிலுள்ள கீரணிப்பட்டி கிராமத்தில்  முத்துமாரியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு நேற்று காலையில் ஆலங்குடி, மேலமாகாணம், கல்லல், மானகிரி, தளக்காவூர், நாச்சியாபுரம், இளங்குடி உள்ளிட்ட ஊர்களிலிருந்து அலங்கரித்து கொண்டு வரப்பட்ட சுமார் 150 மாடுகள் தொழுவிலும், 150க்கும் மேற்பட்ட மஞ்சுவிரட்டு காளைகள் வயல் பகுதியிலும் கட்டுமாடுகளாக ஆங்காங்கே அவிழ்த்துவிடப்பட்டன. இதில் சிலருக்கு லேசான காயம் ஏற்பட்டது. இதில் அரசு அனுமதியின்றி மஞ்சுவிரட்டு நடத்தியதாக கூறி கீரணிபட்டி வி.ஏ.ஓ, சங்கரேஸ்வரி கொடுத்த புகாரின் பேரில், கீரணிபட்டியை சேர்ந்த சாத்தையா மகன் பழனியப்பன்(44), கருப்பையா மகன் பழனியப்பன்(54), ராமசாமி மகன் பழனியப்பன்(34), புகழேந்தி(42), வேலு(56) ஆகிய 5 பேர் மீதும், மேலும் இதே போன்று அரசு அனுமதியின்றி வயல் பகுதியில் மஞ்சுவிரட்டு மாடுகளை அவிழ்த்துவிட்டதாக கூறி அருகில் உள்ள ஊர்களை சேர்ந்த சுப்பிரமணியன்(56), முருகானந்தம்(42), ஆறுமுகம்(55), சுப்பிரமணியன்(45), பாண்டிச்செல்வம்(35) என மொத்தம் 10 பேர் மீதும் நாச்சியாபுரம் காவல்நிலைய எஸ்.ஐ., ஈஸ்வரன் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றார்.

Tags :
× RELATED கணபதிக்கு சிறப்பு அபிஷேகம்