ராமநாதபுரத்தை வறட்சி மாவட்டமாக அறிவிக்க கோரி விவசாய சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

சாயல்குடி, ஜூலை 18:  ராமநாதபுரத்தை வறட்சி மாவட்டமாக அறிவிக்கக் கோரி கடலாடியில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. கடலாடி தாலுகா தலைவர் காந்தி தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் மயில்வாகணன், மாவட்ட தலைவர் முத்துராமு முன்னிலை வகித்தனர். தாலுகா செயலாளர் நவநீத கிருஷ்ணன் வரவேற்றார்.
இதில் ராமநாதபுரம் மாவட்டத்தை வறட்சி மாவட்டமாக அறிவித்து விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும். பயிர்காப்பீடு திட்டத்தில் காப்பீடு செய்துள்ள அனைத்து விவசாயிகளுக்கும் இழப்பீடு வழங்க வேண்டும். கடலாடி தாலுகாவில் ஏற்பட்டுள்ள குடிண்ணீர் தட்டுப்பாடை போக்க போர்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கவேண்டும், நூறு நாள் வேலை திட்டத்தில் அட்டை வைத்துள்ள அனைவருக்கும் வேலை வழங்க வேண்டும். வேலை அளவையும், கூலி அளவையும் வாரம் ஒருமுறை நிர்ணயிக்க வேண்டும் என கோரி கோஷமிட்டனர்.

× RELATED சுவாமி தரிசனத்திற்கு செல்ல கூடுதல்...